Chennai : உலக மகளிா் உச்சி மாநாடு – மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கம்.!

Advertisements

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிா் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிா் உச்சி மாநாடு செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெறுகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் உதவும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் தொடா்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக வங்கியின் மண்டல இயக்குநா் செம் மெட்டே, ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி காந்தா சிங், உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *