ஹைதி நாட்டில் அகதிகள் படகு தீப்பிடித்து விபத்து – 40 பேர் உயிரிழப்பு !

ஹைதி :
ஹைதியில், அகதிகள் சென்ற படகு தீப்பிடித்ததில், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைதி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் புறப்பட்டனர். அப்போது படகு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில், 41 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 40 பேர் வரை சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சர்வதேச அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் கிரிகோயர் குட்ஸ்டீன்,  ஹைதி நாட்டில் சுகாதார வசதியின்மை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் ஆபத்து நிறைந்த பயணங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகி உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *