TTDC Bus: சுற்றுலா செல்ல 2 புதிய பேருந்துகள்!

Advertisements

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு வழங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காகவும், அதே போன்று சுற்றுலா பிரியர்களுக்குத் தரமான சேவைகளை வழங்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 சுற்றுலா பேருந்துகள் பயான்பட்டில் உள்ளன.

இதன் தொடர்ச்சியாகத் தற்போது சுற்றுலா பயன்பாட்டிற்காகத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.2.92 கோடி மதிப்பில் 2 புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகளைச் சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இந்தப் பேருந்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 58 மாணவர்கள் இன்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *