இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 67 சதவீத வாக்குகள் பதிவு.!

பீகார் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 67 சதவீத வாக்குகள் பதிவாகிவுள்ளது.

பீகாரில், 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் 6 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

இந்த, முதல் வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 122 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு விறு விறுப்புடன் நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் காலையில் இருந்தே ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். பின்னர், வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 14 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *