ஈரோடு அருகே உள்ள தனியார் திரையரங்கில், பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்து ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்வையிட்டு, ரசிகர்களின் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
ஈரோடு அருகே உள்ள தனியார் திரையரங்கில், பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்து ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்வையிட்டு, ரசிகர்களின் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள திரையரங்குகளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று திரையிடப்பட்டு, ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கரட்டடிபாளையம் தனியார் திரையரங்கிற்கு வருகை தந்து, ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களின் கோஷங்களுக்கு மத்தியில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் அமைச்சர் செங்கோட்டையன் திரையரங்கில் அமர்ந்து திரைப்படத்தை பார்வையிட்டார். இதற்கிடையில், ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திரையரங்கின் கண்ணாடி நுழைவுவாயில் உடைந்து, ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிலவியது.