போர் நடைபெற்று வரும்  நிலையில் தற்போது அமெரிக்கா களத்தில் இறங்கி ஈரான் மீது தாக்குதல்.!

ஈரான்  இஸ்ரேல் இடையே  தீவிர போர் நடைபெற்று வரும்  நிலையில் தற்போது அமெரிக்கா களத்தில் இறங்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே இரு வாரங்களாக போர் நடைபெற்றுவரும் நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் 3 அணுஉைலைகள் மீது வெற்றிகரமாக தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூகஊடகங்களில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள  பதிவில்,  ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களான போர்டோவ், நடான்ஸ், எஸ்பஹான் மீது வெற்றிகரமாக தாக்குதலை அமெரிக்க போர்விமானங்கள் நடத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்திய விமானங்கள் பாதுகாப்பாக ஈரானில் இருந்து வெளியே வந்ததாக கூறினார். இதற்கு அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, இதைப்போன்று செய்யக்கூடிய ராணுவம் உலகில் எங்கும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். டிரம்பின் இந்த பதிவால் பெரும் சர்சை எழுந்துள்ளது. ஏற்கனவே ஈரானும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது இதில் அமெரிக்காவும் களமிறங்கியதால் மூன்றாம் உலக போர் நிகழுமோ என அச்சம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *