
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி என்ற விவாதம் பல்வேறு கூட்டணிகளிலும் ஒலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் கடந்த சில நாட்களாக கூட்டணி ஆட்சியில் பங்கு என்ற குரலை காங்கிரஸ் கட்சி எழுப்பி வருகிறது. திருச்சி வேலுச்சாமி போன்ற மூத்த தலைவர்கள் முன்வைக்கும் போது கூட பெரிதாக கவனிக்கப்படவில்லை.
ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களே இந்த கருத்தை ஆதரிக்கும் போது சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. இந்த விவாதத்தை அடுத்து கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது.இடதுசாரிகளின் நிலைப்பாடு சற்று வித்தியாசமானது. தேர்தலுக்கு முன்பாக ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதிகாரத்தில் பங்கு. இல்லையெனில் ஆட்சியில் பங்கு கிடைத்தாலும் வேண்டாம் என்று மறுத்து விடுவோம் என்கிறார்கள்.
விசிக: கூட்டணி ஆட்சி குறித்து நீண்ட காலமாகவே பேசி வரக்கூடிய முக்கிய கட்சியாகும். இருப்பினும் போதிய அழுத்தம் எதுவும் தராமல் திமுகவில் மிரட்டுலுக்கு பயந்து அவ்வப்போது பின்வாங்கிக் கொள்கின்றனர்.மதிமுக: இதுவரை கூட்டணி ஆட்சி குறித்து எந்த கருத்தையும் முன் வைக்மால் அதிக தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் அக்கட்சிக்கு மத்திய தேர்தல்ஆணையத்தின் அங்கிகாரம் பெறவேண்டுப் என்பதில் மட்டுமே குறியாக உள்ளது.
கூட்டணி கட்சிகளின் குரல்களுக்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் மூத்த தலைவர்கள் அவ்வப்போது தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். தற்போதைக்கு கூட்டணி ஆட்சிக்கான தேவை தமிழகத்தில் எழவில்லை என்பது தான் திமுக தரப்பின் பதிலாக இருக்கிறது. இதன்மூலம் தங்களின் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள திமுக தயாராக இல்லை என்று தெரிகிறது. அதிமுக கூட்டணிக்குள் ஒலிக்கும் கூட்டணி ஆட்சிக்கான குரல்கள் பாமகவை பொறுத்தவரை ராமதாஸ், அன்புமணி இடையிலான ஒரு உரசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் ஆட்சியில் பங்கு குறித்து அன்புமணி குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
குறிப்பாக பாமக பொருத்துவரையில் எந்தக்கட்சி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறார்கள் ஆனால், கூட்டணி ஆட்சி அவர்கள் வலுயுறுத்தவில்லை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்குகேட்கும் அளவிற்கு பாமக இன்னும் வளரவில்லை.பாஜக: 2026 தேர்தல் நடைபெற ஓராண்டிற்கும் முன்னதாகவே அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாரம் இரண்டு முறை கூட்டணி ஆட்சி குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் புதிதாக கூட்டணி ஆட்சி குறித்த குரல்கள் ஒலிப்பதன் பின்னணியை பார்த்தால், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கேட்டு பெறுவதற்கான ஒரு தொடக்கம் எனவுமம். இருப்பினும் திராவிட கட்சிகள் கடைசி நேரத்தில் இந்த விஷயத்தை எப்படி கையாளப் போகின்றன என்பதை பொறுத்து தான் தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த கால அரசியல் சூழல்களில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தற்போது மாநிலத்திலும் கூட்டாட்சி என்ற சொல்லும் காலம் வந்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டணியாக சென்று வாக்கு கேட்கிறார்கள். அதுவே வெற்றி பெற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தை கூட்டணி கட்சிகள் உடன் பங்கிட்டு கொள்வதை மறுப்பது என்ற கேள்வி தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது.
அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தான் ஒரு ஆரோக்கியமான ஜனநாயக செயல். இத்தகைய ஆரோக்கியமான ஜனநாயக செயல் பாஜகவுக்கு இருக்கிறது, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது, ஆனால் தமிழகத்தை ஆளக்கூடிய அண்ணா அறிவாலய திமுகவுக்கு மட்டுமே இல்லை, தற்போதைய அரசியல் சூழலில் தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மை உடன் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.




