U19 World Cup : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி.!

19 வயது உட்பட்டவருக்கான ஆண்கள் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது.

19 வயது உட்பட்டவருக்கான ஆண்கள் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது.இதில், குருப் 2 பிரிவில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 252 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன்களும்,கனிஷ்க் சௌஹான் 35 ரன்களும் குவித்தனர்.

பாகிஸ்தானின் அணியின் பந்து வீச்சு தரப்பில் அப்துல் சுப்ஹான் 3 விக்கெட்களும், முகமது சயாம் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் பின்னர்,களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46 புள்ளி இரண்டு ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே சேர்த்து படுதோல்வியடைந்தது.

இந்திய அணியின் பந்து வீச்சு தரப்பில் கிலான் படேல், ஆயுஷ் மத்ரே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகைச் செய்தனர். சிறப்பாக விளையாடிய கனிஷ்க் சௌஹானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 8 புள்ளிகளுடன் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *