அமெரிக்க வீரர்களைக் கொன்றால் சன்மானம் – ஈரான் தளபதி அறிவிப்பு.!

அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் ராணுவ தளபதி அமீர் ஹதாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.இதனால், மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதேவேளையில், ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்கப்போவது யார்? என்பது குறித்த அதிகார மோதலும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஈரான் ராணுவ தளபதி அமீர் ஹதாமி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 28 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ராணுவ வீரர்களை பெண் பிடித்து கொடுத்தால், இந்தத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *