“நிச்சயமாக பதிலடி தருவோம்” – ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!

பாரசீக வளைகுடாவில் நடக்கும் சம்பவங்களுக்கு தாங்கள் நிச்சயமாக பதிலடி தருவோம் என்று ஈரான் நாடளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில், அந்நாட்டு நாடளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாரசீக வளைகுடாவில் நடக்கும் சம்பவங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாகவும், அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தற்போதைய பேச்சுவார்த்தைகள் மூலம் தாக்குதலைப் பற்றி விவாதிப்பதை விட, போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *