Iran Announces Visa – Free Travel For indian: விசா தேவையில்லை!

இந்திய பயணிகளுக்கு சலுகை அளித்த ஈரான் சலுகை..!

இந்தியா மக்கள் ஈரானிற்கு செல்வதற்கு  சுற்றுலா பயணிகள் விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

ஈரான் மொத்தம் 33 நாடுகளுக்கு சலுகை அளித்துள்ளது. இதில் இந்தியாவும் அடங்கும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இது  தொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.

சமீபத்தில் பல நாடுகளில் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே துபாய், மலேஷியா , போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலாபயணிகளின் வருகைக்கு விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

இதனால் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்தியர்களுக்கு ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை என்று அறிவித்திருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *