
சென்னை: ”2011ல் கூட்டணி வைத்து தேமுதிக எதிர்க்கட்சியான போது சிலர் செய்த துரோகம், தேமுதிகவுக்கும், விஜயகாந்துக்கும் பெரிய சரிவை கொடுத்தது. அந்த வலியும், விஜயகாந்த் உடல்நிலை பாதிக்க காரணமாக இருந்தது” என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
சென்னையில் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: யாரை எல்லாம் விஜயகாந்த் நம்பினாரோ, யாருக்கு எல்லாம் எம்எல்ஏ சீட் கொடுத்தாரோ, அவர்கள் எல்லோரும் துரோகம் செய்தார்கள்.
2011ல் கூட்டணி வைத்து தேமுதிக எதிர்க்கட்சியான போது சிலர் செய்த துரோகம் பெரிய சரிவை தேமுதிகவுக்கும், விஜயகாந்துக்கும் கொடுத்தது. அந்த வலியும், விஜயகாந்த் உடல்நிலை பாதிக்க காரணமாக இருந்தது. எனக்கு அவசரமாக பதவி வழங்கப்படவில்லை.
பெண்கள் அரசியலில் சாதிப்பது கடினம். ஜெயலலிதா தான் என் ரோல்மாடல். எனக்கு அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும் மிக பிடிக்கும். தேமுதிக தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லாமல், அன்னையாகவும் இருந்து வருகிறேன்.
தொண்டர்கள் மீதான நம்பிக்கை உடன் பயணத்தை தொடர்ந்து வருகிறோம். பொதுச்செயலாளராக நான் தேர்வானது திடீர் என்று எடுத்த முடிவல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

