Advertisements

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 55 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 55 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா 56 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், அக்சர் பட்டேல் 56 ரன்களும் டேவிட் மில்லர் 51 ரன்களும் எடுத்து அசத்தினர்.
Advertisements



