ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி : பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆவேசம்…!

இந்தியா இனி பாகிஸ்தானுக்கு எதிராக தவறான முயற்சிகளை மேற்கொண்டால், பாதிப்புகள்  மிகவும், கடுமையாக இருக்கும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் எச்சரிக்கை விடுத்தார்.

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் கடும் தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் 8 முக்கிய விமானப்படை தளங்கள் சேதமடைந்ததாகவும், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிர்மாய்க்கம் செய்யப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் இந்தியா,பாகிஸ்தான் போர் குறித்து பேசினார். அப்போது,  இந்தியா இனி பாகிஸ்தானுக்கு எதிராக தவறான முயற்சி மேற்கொண்டால், பாதிப்புகள்  மிகவும் பரந்த அளவிலும், ஆபத்தானதாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த ஆண்டு நடந்த மோதல் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போர் என்றும் பாகிஸ்தானின் இறையாண்மையை யாராவது சோதிக்க நினைத்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.

ஆசிம் முனீரின் இந்த மிரட்டலுக்கு இது தொடர்பாக, இந்திய ராணுவ தளபதிகள் பேசியபோது, பாகிஸ்தான் ராணுவம் போர்க்களத்தில் காட்டிய திறமையை விட, பொய்ப் பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்று பதிலடியாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *