இந்தியா இதை முன்பே செய்திருக்க வேண்டும் – டிரம்ப் அறிவிப்பு

சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்காக பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் மூன்று பேருக்கிடையே நிலவிய நெருக்கம், அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மூன்று தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியபோது, மூன்று பேரின் சந்திப்பு வெறுப்பூட்டுவதாக இருக்கிறது என்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமர் மோடி, உலகின் இரண்டு மிகப்பெரும் சர்வாதிகாரிகளான புதின், ஜின்பிங் ஆகியோருடன் ஒன்றாக காணப்பட்டது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வெள்ளை மாளிகையில் இந்தியா மீதான வரிகளை மறுபரிசீலனை செய்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்து பேசியபோது, எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, எங்கள் வணிக நிறுவனங்கள் விற்க முடியாத அளவுக்கு அதிக வரிகளை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வசூலித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இப்போது தங்கள் வரிகளை ஒன்றுமில்லாமல் குறைக்க முன்வந்துள்ளனர், ஆனால் அது தாமதமாகிவிட்ட நிலையில் இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே அதைச் செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *