IPL 2025 : டெல்லி அணி அபார வெற்றி !

Advertisements

IPL 2025 : LSG vs DC

இந்தியாவின் பீரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 210 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இதன்மூலம் டெல்லி அணி தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *