chennai:தனது உல்லாச வீடியோவை வைத்துப் பெண் செய்த காரியம்..முக்கிய கட்சி பிரமுகர் கைது!

Advertisements

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியைக் கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாகப் பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (59). நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD -EE) செயற்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனி வீடு எடுத்துத் தங்கியுள்ள இவருக்கும் மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி (40) என்பவருடன் புரோக்கர் மூலமாகத் தொடர்பு ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களாகக் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும்போதும் குடும்ப வறுமையை காரணம் காட்டி சிறுக சிறுக சுபாஷினி பணம் பெற்றுள்ளார். அப்போது கடந்த மாதம் 27-ஆம் தேதி இருவரும் உல்லாசமாக இருந்ததை வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர், கடந்த மாதம் 29-ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்த சுபாஷினி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் (எ) பிரகாஷ் (40) என்பவருக்குத் தகவல் தெரிவித்து தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார்.

அங்குத் தனது கூட்டாளிகளான முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோருடன் வந்த கில்லி பிரகாஷ் சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்துப் பணம் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது. அப்போது அவரிடமிருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக ரூ.2.70 லட்சத்தைப் பிடுங்கி உள்ளனர். மேலும், சுபாஷினியுடன் வெங்கடேசன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் எனக் கூறி அவரை மிரட்டி அனுப்பி உள்ளனர்.

தொடர்ந்து வெங்கடேசனுக்கு தொந்தரவு அளித்து வந்த நிலையில் இச்சம்பவம் குறித்து இன்று காலை வெங்கடேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் கில்லி பிரகாஷ், சுபாஷினி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆண் குற்றவாளிகள் மூவரையும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். சுபாஷினியை திருவாரூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011 ஆம் ஆண்டு முதல் சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *