சென்னையில் கடலில் விழுந்த கார் மாயமான ஓட்டுநர் !

சென்னை:

சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று இரவுக் கார் சென்றது. அந்தக் காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.

துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது. இதையடுத்தும் காரில் இருந்த கடற்படை வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆனால், கார் டிரைவர் முகமது சகி கடலில் விழுந்து மாயமானார். அவரைத் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதேவேளை, காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *