Internet fraud: போலி லிங்கை நம்பி 39 லட்சத்தை இழந்த வாலிபர்!

Advertisements

போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்: சேலம் மாரமங்கலத்துப் பட்டியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர், இவருக்குக் கடந்த 12-ந்தேதி டெலிகிராம் மூலம் மர்ம நபர் அறிமுகமாகி பேசினார். அப்போது அவர் அனுப்பும் செயலியைப் பதிவிறக்கி விவரங்களைப் பூர்த்தி செய்தால் இரட்டிப்பு பணம் பெறலாமெனத் தெரிவித்தார்.

இதனை நம்பிய அந்த வாலிபர் தனது விவரங்களைத் தெரிவித்து ரூ.39.38 லட்சத்தை மர்ம நபர் பதிவிட்டு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்தார். பணம் சென்றடைந்ததும் மர்ம நபரின் டெலிகிராம் வெப்சைட் லிங்க் அனைத்தும் முடக்கப்பட்டது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குஜராத், அசாம் மாநிலங்களைச் சேர்ந்த மோசடி கும்பல்களின் வங்கி கணக்குகளுக்குப் பணம் சென்றடைந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அந்தக் கும்பல்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுபோலப் போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *