இந்திய விமானியின் வீரத்தை பாராட்டிய டிரம்ப் – உலக அரங்கில் பெருமை..!

இந்திய விமானி உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய ஹீரோ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
விமான கடத்தல் முயற்சியில் இருந்து, இஸ்ரேல் பயணிகளை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் பத்திரமாகக் காப்பாற்றினார்.
இதுதொடர்பாக அமெரிக்காவின் வாசிங்டனில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்திய விமானி உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய ஹீரோ என்று தெரிவித்தார். சக விமானி கத்தியால் தாக்கியபோதும் துணிச்சலாகப் போராடியதாகக் கூறினார்.
மேலும், விமானத்தை ஓட்டிய அனுபவமே இல்லாத ஒரு பிளம்பர் துணிச்சலாகச் செயல்பட்டு விமானத்தை நிலைநிறுத்த உதவியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் நடுவானில் மாபெரும் துயரம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *