வங்காளதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி…!

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில்  வங்காளதேசம் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில், ஆசிய விளையாட்டு ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையால் போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், வங்காளதேச அணி 13 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. இதில், அதிகப்பட்சமாக தவ்ஹித் ஹரோடி 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *