சர்வதேச யோகா பயிற்சியில், மூன்று லட்சம் பேர் கலந்து கொண்ட உலக சாதனை – நரேந்திரமோடி

Advertisements

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா பயிற்சியில், மூன்று லட்சம் பேர் கலந்து கொண்ட உலக சாதனை யோகா நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இதில் பாரத பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, யோகா பயிற்சி மேற்கொண்டு, உலக சாதனை நிகழ்த்தியதாகவும், திருவண்ணாமலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், குறிப்பாக 2015-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 11 வருடங்களாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், விசாகப்பட்டினத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கடற்கரையில் 28 கிலோமீட்டர் தொலைவிற்கு, மூன்று லட்சம் பேர் கலந்து கொண்ட உலக சாதனை யோகா நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இதில் பாரத பிரதமர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்தியதாகவும், குறிப்பாக 175 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதாகவும், காலையில் சென்னையில் சித்தா கல்லூரியில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டதாகவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *