ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற  ஏலத்தில், பருத்தி குவிண்டாலுக்கு 7499 ரூபாய் -க்கு கொள்முதல்

Advertisements

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற  ஏலத்தில், பருத்தி குவிண்டாலுக்கு  7499ரூபாய்-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பருத்தி ஏலம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், நாகை விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்கீழ் இ-நாம் முறையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக 7,499-ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 5,869-ரூபாக்கும் சராசரி விலையாக 6,750ரூபாக்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

மொத்தமாக சுமார் 900 குவிண்டால் பருத்தி, 53 ரூபாய் லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 200-க்கு மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து   20-க்கு மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் பருத்தியை கொள்முதல் செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *