சர்வதேச செவிலியர் தினம் – மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி….!

Advertisements

காரைக்காலில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு குத்து விளக்கேற்றி அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி, மதர் தெரேசா அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயபாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

சர்வதேச செவிலியர் தின நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனை அடுத்து சிறப்பாக செயல்படும் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து விருதுகள் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *