
சர்வதேச ஜாகுவார் தினம், ஜாகுவார் எதிர்கொள்ளும் அச்சுருத்தல்கள் வரை அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்டது.ஆண்டுதோறும் நவம்பர் 29-ஆம் தேதி சர்வதேச ஜாக்குவார் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய காட்டுப் பூனை இனத்தைச் சேர்ந்ததாகவும், கலாச்சார பாரம்பரியமாகவும் கொண்டாடப்படுகிறது.சர்வதேச ஜாகுவார் தினம் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி, இலக்குகளை அடைவதற்கான பரந்த முயற்சிகளை மேற்கொள்வதற்காகவே ஜாகுவார் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
வரலாறு;
மார்ச் 2018- ஆம் ஆண்டு ஜாகுவார் 2030 முடிவில் 14 நாடுகளின் பிரதிநிதிகள் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் 2030 அறிக்கையினை தயார் செய்தது.இது ஜாகுவார் இனத்தைப் பாதுகாப்பு குறித்தும் பல்லுயிர் பெருக்கம் குறித்தும் அங்கீகரித்துப் பிரேசில் உட்பட பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. உலக அளவிலான காட்டுப்பூனை பாதுகாப்பு இயக்குனர் ஆலன் ராபினோவிட்ச் குரல் கொடுத்துள்ளார்.`ஜாகுவார் மேன்’ மற்றும் வனவிலங்கு பாதுகாப்பின் இந்தியானா ஜோன்ஸ் என்று அன்பாகவும் மரியாதையுடனும் போற்றுவதற்காகப் பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்குவார் எப்படி இருக்கும்;
இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரும்பூனை இனமாக உள்ளது. இதன் தற்போதைய வாழ்விடமானது மத்திய அமெரிக்காவில் பெரும்பான்மையாக மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் உள்ளது.உடலில் புள்ளிகளுடன் காணப்படும் இப்பூனை சிறுத்தையின் புறத்தோற்றத்தை ஒத்திருக்கிறது.
இது உருவத்தில் மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருந்தாலும் இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியைப் போலவே குணங்கள் இருக்கும். அடர்த்தியான மழைக்காடுகளே இவற்றிற்கு பிடித்த வசிப்பிடமாக இருந்தாலும், இவை காடுகள் நிறைந்த திறந்தவெளி திணை நிலங்களிலும் வாழ்கின்றன. ஜாகுவார்கள் பொதுவாக நீர் நிறைந்திருக்கும் இடங்களில் தான் இருக்கும்.
புலியைப் போலவே, ஜாகுவார்யும் நன்றாக நீந்தும். ஜாகுவார் பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கியிருந்து பாயும். வாழ்வதற்காக இரை தேடும் ஊனுண்ணி ஆகும். மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போலச் செயலாற்ற வல்லது.
இயற்கைச் சூழல் அமைப்புகளையும், இரையாகும் விலங்குகளின் இனத் தொகையையும் ஒழுங்குபடுத்துவதில் ஜாகுவார் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜாகுவாரின் கடிக்கும் சக்தி அதிகம். ஒரே கடியில் உயிரைக் கொல்லும் திறன் கொண்டதாக உள்ளது.
ஜாகுவார் இனத்தின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தவாறே உள்ளது. வசிப்பிட இழப்பும், தற்போதிருக்கும் விலங்குத் தொகை வெவ்வேறு இடங்களுக்குப் பிரிக்கப்பட்டு விடுவதும் இந்த இனத்தின் அழிவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களில் அடங்கும். ஜாகுவார்கள் மற்றும் அதனுடைய உடல் பாகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.சர்வதேச வியாபாரம் தடைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தப் பெரும்பூனையின விலங்குகள் இன்னமும் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. குறிப்பாக, தென் அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணையாட்கள் இவற்றை அழிக்கின்றனர்.
இவை எண்ணிக்கையில் குறைந்து விட்டாலும், இவற்றின் வீரம் மிகப் பெரிதானது. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இது, மாயா மற்றும் அஜ்டெக் ஆகியவை உள்ளிட்ட அமெரிக்கக் கலாசாரத்தின் புராணங்கள் பலவற்றிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளது.
Panthera onca பாந்தெரா இனம் இரண்டிலிருந்து 3.8 மில்லியன் வருடங்கள் முன்னர் தோன்றியதாக உயிர் எச்சப் பதிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நியோஃபெலிஸ் நெபுலோஸா எனப்படும் மேகங்கள்போலப் புள்ளியிட்ட சிறுத்தைகள் தான் இந்த இனத்திற்கு அடிப்படை என்று கூறப்படுகிறது.
மேலும் விரிவான முறையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கொலம்பிய ஜாகுவார்கள் குறைந்த அளவே இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



