
டெல்லியில் பெண் பத்திரிகையாளர்கள் அவமதிப்பிற்கு பிரதமர் மோடி அமைதிக் காப்பது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் எதிர்க்கட்சியினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதில், பொது மன்றத்தில் பெண் பத்திரிகையாளர்களை விலக்குவதற்கு பிரதமர் மோடி அனுமதிக்கும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் நீங்கள் அவர்களுக்காக நிற்க முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமானகத் தெரிவதாகக் குற்றம் சாட்டினார்.
இத்தகைய பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது நீங்கள் அமைதியாக இருப்பது, பெண் சக்தி என்ற உங்கள் கோஷம் வெறும் வெற்று முழக்கம் என்பதை அம்பலப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டார்.




