
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேகமாகக் கேரளாவுக்கு கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக லாரிகளால் தொடர் விபத்தின் எதிரொலியாகக் கனரக லாரிகளில் சிக்கி விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க இளைஞர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ காட்சிசமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்பட்ட வருகின்றன குறிப்பாக இந்தக் கனரக லாரிகள் அதிவேகமாகச் செல்வதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களால் கனிம வளம் கடத்தும் கனரக லாரிகளுக்கு எதிராகவும் , கனரக லாரிகளிலிருந்து ஏற்படும் விபத்துகளிலிருந்து தன்னைத் தானே பாதுகாக்க வேண்டும் எனவும் கூறி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் எமனாகச் சித்தரிக்கப்பட்ட கனரக லாரிகளிலிருந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதாகவும் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது ஏற்கனவே கனரக லாரிகளுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

