இஸ்ரேலில் புதிய ஆட்சி அமைக்க அழைப்பு: அதிபர் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதற்கான அழைப்பு குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக அதிபா் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சித் தலைமையிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே வென்றது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியில் இடம்பெற்று 7 இடங்களைக் கைப்பற்றிய யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி, நெதன்யாகு அரசு அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. இதனிடையே, முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்காட்டிற்கு அரபு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பலம் 67ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையல் புதிய அரசை அமைப்பது தொடா்பாக தோ்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுடன் அதிபா் ஐசக் ஹெர்சாக் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மீண்டும் புதிய தேர்தல் ஒன்றை சந்திப்பதை தவிர்க்க சமரசமாக செல்லுமாறு அனைத்துக் கட்சிகளை வலியுறுத்தினார்.
மேலும், புதிய அரசு அமைப்பதற்கான அழைப்பு குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *