இந்தியா – இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்: 4-ஆம் நாள் ஆட்ட நிலவரம்.!

இந்தியா, இலங்கை இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்களில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்தியா, இலங்கை இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் காலே நகரில் நடைபெறுகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 462 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்கள் மட்டுமே குவித்தது.

தொடர்ந்து, நான்காவது நாளில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 66 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 44 ரன்களையும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் இலங்கை அணியின் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூரியா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. பந்து வீச்சு இந்திய அணியின் மாணவ் சுதார் இரண்டு விக்கெட்களையும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியா வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *