தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி – தினகரன் கடும் கண்டனம்!

சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பல்லாவரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி வெட்டிக் கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, திருநெல்வேலி அருகே இளைஞர் படுகொலை எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைகள் சட்டம்-ஒழுங்கைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெக அரசு சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *