
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தின் வெள்ளோட்டத்தைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டதுடன், விமானத் தயாரிப்பையும் தொடக்கி வைத்தார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமானத் தயாரிப்பு ஆலை உள்ளது. இங்குத் தயாரிக்கப்பட்ட தேஜஸ், எல்சிஏ எம்கே1 ஏ, கனரக விமானம் எச்டிடி 40, சுகோய் வகை விமானங்களின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி அந்த விமானங்களுக்குத் தண்ணீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் முன்னிலையில் விமானங்களின் பறப்பு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இந்திய விமானப்படைக்கான இலகு வகை விமானம் எல்சிஏ எம்கே1 ஏ, கனரக விமானம் எச்டிடி 40 ஆகியவற்றின் தயாரிப்பையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.


