India’s Anti – Corruption System: விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்!

Advertisements

காரைக்காலில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் அழிந்து வரும் விவசாயத்தை காத்திட விவசாயிகளுககு நிரந்தர வருமானத்திற்க்கு வழிவகை செய்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் மாநிலம் காரைக்காலில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் அவர்களை அரசு பணியாளர் ஆக்கிடவும், ஓய்வுதியம் அளித்து அவர்களுக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தால் விவசாயிகள் காக்கப்படுவார்கள் அதனால் விவசாயம் அழியாமல் காக்கப்படும் அதற்கு அவர்களை அரசு பணியாளர்களாக மேம்படுத்தி விவசாயத்தை அரசு பணியாக அறிவித்திட மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும் என இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு ஓய்வுதியம் அளித்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் டாக்டர் எஸ் அனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத்தை அரசு பணியாக அறிவித்திட வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜ்விந்தர் சிங்(பஞ்சாப்), சர்வன் சிங் வந்தேன்(பஞ்சாப்), குர்அமிநீத் சிங் மாங்காட்(உத்தர பிரதேசம்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *