Maldives Travel: 10 ஆயிரம் புக்கிங்கை கேன்சல் செய்த இந்தியர்கள்!

Advertisements

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எதிராக மோசமான கருத்துகளையும், இந்தியர்களுக்கு எதிராக இன வெறி கருத்துகளையும் மாலத்தீவு அமைச்சர்கள் கூறியதால், ஒரே நாளில் 10 ஆயிரம் புக்கிங்கை இந்தியர்கள் கேன்சல் செய்துள்ளனர்.

சமீபத்தில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்க லட்சத்தீவிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் வாக்கிங் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி. அந்தப் படங்களைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இணையத்தில் மோடியை பல கோடி பேர் பின்பற்றுவதால், லட்சத்தீவுக்கு அட்டகாசமான விளம்பரம் கிடைத்தது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு இந்தியர்கள் கொந்தளித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக மோசமான கருத்துகளையும், இந்தியர்களுக்கு எதிராக இன வெறி கருத்துகளையும் மாலத்தீவு அமைச்சர்கள் கூறியதால் இந்தியர்கள் பலரும் தங்களின் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதற்கான பயணத்தைக் கேன்சல் செய்து வருகின்றனர். ஒரே நாளில், 10 ஆயிரம் ‘புக்கிங்கை’ இந்தியர்கள் கேன்சல் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாலத்தீவு தூதர் இப்ராஹிம் ஷாகிப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *