Mumbai : காங்கிரஸ் தலைவருக்கு வலுக்கட்டாயமாகச் சேலை கட்டிவிட்ட பாஜகவினர்..!

Advertisements

மும்பை அருகே டோம்பிவிலியில் பிரதமர் நரேந்திர மோடி சேலை கட்டியிருக்கும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் மாமா பகாரேயைப் பிடித்துப் பாஜகவினர் அவருக்கு வலுக்கட்டாயமாகச் சேலை கட்டிவிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி சேலை கட்டியிருப்பதைப் போன்று மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை மூத்த காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் என்ற ‘மாமா’ பகாரே பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார்.

இதையறிந்த கல்யாண் டோம்பிவிலி பாஜகவினர் பொது இடத்தில் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு அவருக்கு வலுக்கட்டாயமாகச் சேலையைக் கட்டிவிட்டனர். இது மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *