இந்திய கடற்படையில் புதிய மைல்கல்..!

Advertisements

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பலையும், அணுவாற்றலால் இயங்கும் ஐஎன்எஸ் அரிதாமன் நீர்மூழ்கிக் கப்பலையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படையில் சேர்த்துள்ளார்.

ஆறாயிரத்து 670 டன் எடைகொண்ட தாராகிரி போர்க்கப்பல் மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இந்தக் கப்பலைக் கடற்படையில் சேர்க்கும் விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்படை ஆணையகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அலுவலர்களின் தலைவர் அனில் சவுகான், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பலைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படைக்கு அர்ப்பணித்தார். இதேபோல் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுவாற்றலால் இயங்கும் ஐஎன்எஸ் அரிதாமன் நீர்மூழ்கிக் கப்பலையும் அவர் இந்திய கடற்படையில் சேர்த்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *