
பெரிய வெள்ளி நாள் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நமக்கு நினைவூட்டுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் இன்று உலகம் முழுவதும் பெரிய வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தளப் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நமக்கு நினைவூட்டும் நாளாகப் பெரிய வெள்ளி அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்னாளில் மக்களிடையே நல்லிணக்கமும், அன்பும், மன்னிக்கும் குணமும் மேலோங்கட்டும் என்று தெரிவித்துள்ளார். சகோதரத்துவமும் நம்பிக்கையும் நம் அனைவரையும் வழிநடத்தட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


