Advertisements

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக்கில் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு அறிவித்த வினேஷ் போகத் மீண்டும் களம் இறங்க தயார் என அறிவித்துள்ளார். 33-வது ஒலிம்பிக் திருவிழா கடந்த 2024ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு பெற்றது.
இதில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார். இந்தியாவின் வினேஷ் போகத் (29). இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு எடை சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது தெரியவந்தது.நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வினேஷ் போகத்துக்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் தெரிவித்தளனர்.எனினும், அப்போதைய சூழலில் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பலரும் அவரின் முடிவை மறுபரீசிலனை செய்ய கோரினர். இந்த நிலையில், 31 வயதான அவர் மீண்டும் குத்துச்சண்டை களத்துக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை குறி வைத்து களம் இறங்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisements


