
2001ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை முறியடித்த தியாகிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் ஐந்து பேர் ஒரு காரில் வந்து நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்களைத் தில்லிக் காவல்துறையினரும், நாடாளுமன்றக் காவலர்களும் தடுத்து நிறுத்தினர்.
அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் தில்லிக் காவல்துறையினர் ஆறு பேர், நாடாளுமன்றக் காவலர்கள் இருவர், தோட்டப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்துப் பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் பயங்கரவாதிகள் ஐவரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த காவலர்களின் நினைவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகிகளின் உருவப்படங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



