Weapons Summit: ரஷ்யா அதிபருடன் வடகொரியா அதிபர் சந்திப்பு!

Advertisements

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று ரஷ்யா சென்றடைந்தார். இவரது பயணம் அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது…

மாஸ்கோ: ரஷ்யாவில் புடினை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் ஆயுத உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று ரஷ்யா சென்றடைந்தார். இவரது பயணம் அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய புடினை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் ஆயுத உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

உக்ரைனின் போரை எதிர்க்கொள்ள வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கேட்டுப் புடின் நாடியதாகக் கூறப்படுகிறது. தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெற்று உள்ளது. வட கொரியாவுடன் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள வாக்னர் படைக்குஆயுதங்களைவழங்கியதற்காகவடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *