
இந்திய அணி வெற்றி!
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தற்போது வரையில் 16 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரையில் விளையாடிய 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 17ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி வங்கதேச அணியில் தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக அடிக்கத் தொடங்கினர்.30 ஓவர்கள் முடிவில் வங்காள் தேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்தது.கடைசியாக வங்கதேச அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 8 விக்கெட்டுகளை இழந்து 50 ஒவரில்256 ரன்களை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசியாக இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 4 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.



