விடியா திமுக அரசு திமுக என எடப்பாடி கண்டனம்..!

Advertisements

மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கைது செய்ததற்கு கண்டனப் பதிவிட்டுள்ளார்.

இதில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், வன்முறைத் தாக்குதல் நடத்தி கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் தற்போது திமுக ஆட்சியில் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *