உலக அரங்கில் சாதிக்க வேண்டும்:அமைச்சர் சுப்பிரமணியம்..!

Advertisements

நம் ஊர்களில் இது போன்ற பல  பலு தூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு  உலக அரங்கில் சாதிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை கோவிலம்பாக்கத்தில் பலு தூக்கும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், புனித தோமையார் மலை கழக ஒன்றிய செயலாளர் ஜி. வெங்கடேசன். எர்ணாவூர் நாராயணன்  ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆணகள் மற்றும் பெண்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கினர். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியம் பேசியபோது, நம் ஊர்களில் இது போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டு  உலக அரங்கில் சாதிக்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து அமைச்சரும் வலுத்தூக்கி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் தலைவர் வருண் குமார், துணைத் தலைவர் சுரேஷ்குமார்,நடிகர் அஜய் ரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *