வங்கதேசத்தவர் மீது கடும் நடவடிக்கை:முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்..!

உத்தரப் பிரதேசத்தில் ஊடுருவியுள்ள ரோகிங்கியர்கள், வங்கதேசத்தவர் மீது கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மாநில மக்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில், மாநிலத்தின் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கைச் சீராக வைத்தல் ஆகியவற்றுக்கு மிகவும் முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஊடுருவித் தங்கியுள்ள ரோகிங்கியர்கள், வங்கதேசத்தவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வீட்டு வேலைக்கோ, தொழில் வணிகத்திலோ யாரையும் பணிக்கு அமர்த்துமுன் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலத்தின் பாதுகாப்பு அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், செழிப்புக்கான அடித்தளம் பாதுகாப்பே என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *