
புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.பின்னர், மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், குழந்தையின் குடும்பத்தினரை, JCM மக்கள் மன்றத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற மங்கலம் கிளை தலைவர் கண்ணபிரான், வில்லியனூர் கிளை தலைவர் பூக்கடை ரமேஷ் உள்ளிட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் நேரில் சென்று குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.அப்போது நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களே இல்லை என்றும், மருத்துவர்களின் வேலையை செவிலியர்கள் செய்ததால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டினார்.மேலும் இதற்கு சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க அனைத்து வகையிலும் JCM மக்கள் மன்றம் உறுதுணையாக இருக்கும் என JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.


