Advertisements

ஆசிய கோப்பை தொடர் போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை இந்தியா வீழ்த்தியுள்ளது.
17 ஆவது ஆசிய கோப்பை தொடர் போட்டியின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அப்போது, அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர். பின்னர், 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கிய நிலையில், குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார். இதையடுத்து, பதும் நிசங்காவுடன் குசால் பெராரா இணைந்து அதிரடியாக ஆடிக் குசால் பெராரா 58 ரன்னும், பதும் நிசங்கா 107 ரன்னும் எடுத்தனர். பின்னர், இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட்டுக் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டு முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்த ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
Advertisements



