Advertisements

பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலில் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். அங்கு கர்ணி மாதா கோவிலுக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். அவருடன் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மாவும் சென்றார். கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியின் வருகையால் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கோவிலில் சிறப்பு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
Advertisements


