இந்தியாவுடன் நல்ல உறவு இருப்பதாக டிரம்ப் பேச்சு..!

Advertisements
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் தனிப்பட்ட நல்ல உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, அதிபர் டிரம்ப் இந்தியாவுடன், பிரதமர் மோடியுடனும் மிகச் சிறந்த நல்ல உறவு இருப்பதாகக் கூறினார். பின்னர், பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ஒரு அழகான அறிக்கை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அதிபர் டிரம்ப்பின் இங்கிலாந்து பயணத்தின்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *