ரோபோ சங்கர் மறைவால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சோகம்..!

Advertisements

பிரபலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்துரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சென்னையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா துறையினர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை யடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியுட்டுள்ளார். இதில், அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் எனக் கூறினார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது எனக் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரு தலைமுறைக்கே அடையாளமாக விளங்கிய நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்தார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *