இந்தியாவில் இணையவழி வணிகம் அதிரித்துள்ளதாக மெக்கின்சி நிறுவனம் தகவல்.!

Advertisements

இந்தியாவில் 85 கோடி இணையப் பயனாளர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே இணைய வழியில் பொருட்களை வாங்குவதாகவும், இணையவழி வணிகத்துக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் மெக்கின்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி இந்தியாவில் இணையவழி வணிகம் பற்றி ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. அதில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இணையவழி வணிகம் அதிரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தச் சில்லறை வணிகத்தில் இணையவழியில் 9 விழுக்காடு மட்டுமே நடைபெற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இணையவழி வணிகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டு இது 17 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *