எச்.ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை!

Advertisements

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2018-ம் ஆண்டுப் பெரியார் சிலையை உடைப்பேன் எனக் கருத்து தெரிவித்தது, கனிமொழி எம்.பி.க்கு எதிராக விமர்சனம் செய்தது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜாவின் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்குகளில் விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது இருந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை ஜி.ஜெயவேல் கூறினார். அதில், எச்.ராஜாவுக்கு எதிராகக் காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டுள்ளன. இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே இந்த வழக்கில் எச்.ராஜா குற்றவாளி என்றும் அவருக்கு 6 மாத சிறைதண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *